பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு


பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு
x
தினத்தந்தி 17 Jan 2019 1:17 AM GMT (Updated: 17 Jan 2019 1:17 AM GMT)

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தாற்போல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்து வருகின்றன. இதனால், பெட்ரோல் விலையின் தாக்கம் வாகன ஓட்டிகளிடையே பெரிதாக தெரிவது இல்லை. புத்தாண்டு பிறந்ததையொட்டி, கடந்த 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. 

பின்னர் 9-ந் தேதி வரை பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10-ந் தேதி ஏறுமுகத்தை கண்ட பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்துள்ளது. நேற்று மட்டும் பெட்ரோல் விலை உயராமல் 8 காசுகள் குறைந்தது. ஆனால் டீசல் தொடர்ந்து உயர்ந்தது. இந்த நிலையில், இன்று 7-வது நாளாக டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. பெட்ரோல் விலையும் இன்று 15 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலை 20 காசுகள் உயர்ந்துள்ளது. 

இதன்படி, இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.15 காசுகளாகவும், டீசல் விலை ரூ.68.42 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதத்தில் சற்று இறங்கு முகத்தில் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலையானது, ஏறத்தாழ ஒருவாரமாக உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story