எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்


எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த  நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்
x
தினத்தந்தி 17 Jan 2019 6:42 AM GMT (Updated: 17 Jan 2019 6:42 AM GMT)

எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாளையொட்டி கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை. வளாகத்தில் நடந்த விழாவில், எம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.

மதுரை: 

எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மெரினா கடற்கரையை ஒட்டி காமராஜர் சாலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 28-ல் அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.2.52 கோடியில் எம்ஜிஆர் வளைவு கட்டப்பட்டது. முதலில் தடை விதித்த நீதிமன்றம் பின்னர் விழா ஏதுவுமின்றி எம்ஜிஆர் வளைவை திறக்க அனுமதித்தது. ஐகோர்ட்  அனுமதியை தொடர்ந்து திரைகள் அகற்றப்பட்டு எம்ஜிஆர் வளைவு திறக்கப்பட்டுள்ளது.

கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை. வளாகத்தில் நடந்த விழாவில், எம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.

Next Story