மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் ! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி + "||" + Petrol, diesel prices hiked for 2nd day. Check rates here

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் ! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் ! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இன்று பெட்ரோல் விலை 18 காசுகள் உயர்ந்துள்ளது.
சென்னை,

தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறைக்கு வந்த பின்னர் பெட்ரோல், டீசல் விலையில் நிலையற்ற தன்மை இல்லாமல் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த 9-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 71 ரூபாய் 7 காசுக்கு விற்பனை ஆனது. இது தொடர்ந்து அதிகரித்து நேற்றுமுன்தினம் ஒரு லிட்டர் 73 ரூபாய் 15 காசுக்கு விற்பனை ஆனது. நேற்றும் 8 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 73 ரூபாய் 25 காசுக்கு விற்பனை ஆனது. கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 18 காசு உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இன்றும் பெட்ரோல் விலை உயர்வை சந்தித்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 18 காசுகள் அதிகரித்து ரூ.7341 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. இதேபோல ஒரு லிட்டர் டீசல் கடந்த 9-ந்தேதி 65 ரூபாய் 70 காசுக்கு விற்பனையானது. 

இது படிப்படியாக உயர்ந்து, நேற்று முன்தினம் 68 ரூபாய் 42 காசுக்கு விற்பனை ஆனது. நேற்றும் 20 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் 68 ரூபாய் 62 காசுக்கு விற்பனையானது. கடந்த 10 நாட்களில் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 92 காசு உயர்ந்துள்ளது. இந்த நிலையில், டீசல் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே சென்று கொண்டு இருக்கிறது. டீசல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ.68.83 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை இறங்கும் போது சொற்ப அளவில் குறைவதாகவும், ஏறும்போது அதிகமாக விலை உயருவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 காசுகளும் உயர்ந்துள்ளன.
2. பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.74.02 ஆக விற்பனையாகிறது.
3. பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.73.87 ஆக விற்பனையாகிறது.
4. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.73.72 ஆக விற்பனையாகிறது.