மாநில செய்திகள்

கொடநாடு விவகாரம்: திமுக மீது அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு + "||" + Minister Jayakumar's allegation

கொடநாடு விவகாரம்: திமுக மீது அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

கொடநாடு விவகாரம்: திமுக மீது அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
கொடநாடு விவகாரத்தில் சயன், மனோஜுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களும், ஜாமீன் கொடுத்தவர்களும் திமுகவை சேர்ந்தவர்கள் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தேர்தல் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை ஏற்கும்.  கட்சி அடையாளத்தை விட்டுக்கொடுக்க முடியாது.  கடந்த காலங்களில் திமுக இரட்டை வேடம் கொண்டிருந்ததை மக்கள் அறிவர். பாஜக உட்பட எந்த இயக்கத்துக்கும் அச்சப்படாத கட்சி அதிமுக. 

எதற்காக அச்சப்பட வேண்டும். மு.க.ஸ்டாலின் திசை தெரியாத காட்டில் தவித்துக் கொண்டிருக்கிறார். தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கட்சிகளின் நிலைப்பாட்டில் மாறுபாடு இருக்கும்.

பட்டாசு தொழிலை பாதுகாக்கும் வகையில் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். கோடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியில் திமுக உள்ளது.  

சயான், மனோஜ் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.  சயன், மனோஜுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களும், ஜாமீன் கொடுத்தவர்களும் திமுகவை சேர்ந்தவர்கள். அதிமுக மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் திமுக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.