ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதல்-அமைச்சராகலாம் - முதல்-அமைச்சர் பழனிசாமி


ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதல்-அமைச்சராகலாம் - முதல்-அமைச்சர் பழனிசாமி
x

ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


நெல்லையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி பேசினார். அவர் பேசுகையில், எம்.ஜி.ஆர் தமிழக தலைவர் மட்டுமல்ல, தேசிய தலைவர். எம்.ஜி.ஆர் காலத்தில் தான் தமிழகத்தில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. வேளாண் துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடாக கிடைக்க உள்ளது. கல்வி, மருத்துவம், விளையாட்டு, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றார். 

இந்தியாவில் பிரிந்த இயக்கங்கள் இணைந்ததாக வரலாறு கிடையாது, பிரிந்த இயக்கம் சேர்ந்தது அதிமுக மட்டுமே. திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை. காவிரி பிரச்னைக்காக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது அதிமுக அரசு. ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ளவை, என்றும் யாராலும் அழிக்க முடியாது என்றார். 

கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் என குற்றம் சாட்டினார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மேலும், ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது எனவும் விமர்சனம் செய்தார். 

Next Story