மாநில செய்திகள்

”சென்னையில் மீண்டும் தலைதூக்கும் பஸ் டே கொண்டாட்டங்கள்” வியாசர்பாடி அருகே போக்குவரத்து நெரிசல் + "||" + Re-emergence in Chennai Bus Day Celebrations

”சென்னையில் மீண்டும் தலைதூக்கும் பஸ் டே கொண்டாட்டங்கள்” வியாசர்பாடி அருகே போக்குவரத்து நெரிசல்

”சென்னையில் மீண்டும் தலைதூக்கும் பஸ் டே கொண்டாட்டங்கள்” வியாசர்பாடி அருகே போக்குவரத்து நெரிசல்
சென்னையில் மீண்டும் தலைதூக்கும் பஸ் டே கொண்டாட்டங்கள். தடையை மீறி கல்லூரி மாணவர்கள் பேருந்தின் (57 எண்) மேற்கூரையில் நின்று கொண்டாடினர்.
சென்னை,

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பஸ் டே கொண்டாட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் பேருந்து தினம் கொண்டாடும் போது பட்டாசு வெடிக்கக் கூடாது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பஸ் டேவை மாணவர்கள் கொண்டாடவே கூடாது என்றும் கடுமையான நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.  தற்போது சென்னையில் மீண்டும்  பஸ் டே கொண்டாட்டங்கள் தலைதூக்க தொடங்கி உள்ளது. 

இந்நிலையில் வியாசர்பாடி அருகே தடையை மீறி கல்லூரி மாணவர்கள் பேருந்தின் (57 எண்) மேற்கூரையில் நின்று கொண்டாடினர்.  கல்லூரி மாணவர்களின் கொண்டாட்டத்தால் வியாசர்பாடி அருகே  கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலையில் வேலைக்கு செல்வோர் மற்றும்  பள்ளிகளுக்கு செல்வோர் கல்லூரி மாணவர்களின் செயலால் மிகுந்த அவதிக்குள்ளாகினர். 

ஆசிரியரின் தேர்வுகள்...