தலைமைச் செயலகத்தில் ஊதுபத்தி கொளுத்தியதற்கு கூட மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பாரா? -அமைச்சர் ஜெயக்குமார்


தலைமைச் செயலகத்தில் ஊதுபத்தி கொளுத்தியதற்கு கூட மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பாரா? -அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 21 Jan 2019 7:07 AM GMT (Updated: 21 Jan 2019 7:07 AM GMT)

தலைமைச் செயலகத்தில் ஊதுபத்தி கொளுத்தியதற்கு கூட மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பாரா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்ஜிஆர், ஜெயலலிதா கனவுகளை பிரதமர் நிறைவேற்றுவது நல்ல விஷயம்தான். அவ்வாறு கூறிய மத்திய பாதுகாப்புத்துறை நிர்மலா சீதாராமனின் கருத்து வரவேற்கத்தக்கது.

சென்னையில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துவிட்டு, கொல்கத்தாவில் மு.க.ஸ்டாலின் பின்வாங்கியது ஏன்? 

சந்தர்ப்பவாதம் என்று சொன்னால் அது திமுகவிற்கும், ஸ்டாலினுக்கும் தான் பொருந்தும். சென்னையில் ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்துவிட்டு, கொல்கத்தாவில் ஸ்டாலின் பம்மி விட்டார். ஏன் பம்மினார்? இதுதான் அவரது இரட்டை வேடம். யாகம் வளர்ப்பதால் ஒருவர் முதலமைச்சராக முடியுமா? ஒரு அலுவலகத்தில் ஊதுபத்தி அல்லது கற்பூரம் கொளுத்தினால் கூட அதற்கு பெயர் யாகம் வளர்ப்பதா? இதையெல்லாம் உடனே திரித்து சொல்கிறார்கள்

தலைமைச் செயலகத்தில் ஊதுபத்தி கொளுத்தியதற்கு கூட மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பாரா? 

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றன . நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது பற்றி அதிமுக அறிவிக்க வேண்டிய நேரத்தில் அறிவிக்கும் என கூறினார்.

Next Story