மாநில செய்திகள்

ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் + "||" + Teachers should end their strike :sengottaiyan

ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர். 

அதை எதிர்த்து, மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அப்போது, நீதிபதிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. தங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்று கூறி, கைவிடப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்க இருப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்து இருந்தனர். இதன்படி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், “ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். வேலைநிறுத்தத்தை கைவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க தமிழக அரசு முன் நடவடிக்கை எடுக்கவில்லை ஐகோர்ட்டு கடும் கண்டனம்
செங்குன்றம் ஏரியில் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது முன்பே தெரியாதா? தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க தமிழக அரசு எந்தவொரு முன் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
2. எட்டு வழி சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
எட்டு வழி சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
3. தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் -மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
வெளிமாநிலங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
4. முல்லை பெரியாறு பிரச்சினை: தமிழக அரசின் ஒப்புதல் இன்றி கேரளா புதிய அணை கட்டக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டக்கூடாது என்று கேரளாவுக்கு உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு, தமிழக அரசின் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.
5. ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என அறிவிப்பு
ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...