பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 23 Jan 2019 1:01 AM GMT (Updated: 23 Jan 2019 1:02 AM GMT)

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னை,

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தாற்போல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்து வருகின்றன. இதனால், பெட்ரோல் விலையின் தாக்கம் வாகன ஓட்டிகளிடையே பெரிதாக தெரிவது இல்லை. 

கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து  வந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எண்ணைய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.99-ஆகவும், 69.62 ஆகவும் விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story