மாநில செய்திகள்

எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல் + "||" + I have no political background; Kodanadu affair I will meet legally- Matthew Samuel

எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்

எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்
எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை, கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக சந்திப்பேன் என கோடநாடு கொள்ளை விவகாரம் குறித்து வீடியோ வெளியிட்ட மேத்யூ சாமுவேல் கூறி உள்ளார்.
சென்னை,

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்பட வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டார். இதையடுத்து தமிழக அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை வந்த மேத்யூ சாமுவேல் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மம்தா கூறுகிறார் என் பின்னால் பாஜக இருப்பதாக. முதல்வர் பழனிசாமி கூறுகிறார் என் பின்னால் திமுக இருப்பதாக. உண்மையை சொல்லப்போனால் என்னை யாரும் இயக்கவில்லை, என் பின்னால் யாரும் இல்லை. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை. கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக சந்திப்பேன். நான் வெளியிட்ட செய்தி முதல்வர் பழனிசாமிக்கு எதிரானதுதான், ஆனால் தனிப்பட்ட கருத்து மோதல் இல்லை.

ஜெயலலிதா மரணத்திலும் பல்வேறு மர்மங்கள் உள்ளன. அவை களையப்பட வேண்டும்  என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோடநாடு விவகாரம் : முதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேலுக்கு விதித்த தடை நீட்டிப்பு -சென்னை ஐகோர்ட்
கோடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் குறித்து பேச மேத்யூ சாமுவேலுக்கு விதித்த தடையை சென்னை ஐகோர்ட் நீட்டித்து உள்ளது. #KodanadIssue
2. கோடநாடு விவகாரம் ; மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு தடை- சென்னை ஐகோர்ட்
கோடநாடு விவகாரம் தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்ட மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் 4 வாரம் தடை விதித்து உள்ளது.
3. கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
4. கோடநாடு விவகாரம்: மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை
கோடநாடு விவகாரம் தொடர்பாக மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
5. கோடநாடு விவகாரம்: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதல்-அமைச்சர் பழனிசாமி வழக்கு
கோடநாடு விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து உள்ளார்.