தூத்துக்குடியில் வீடு-கடைகளில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கருப்புக்கொடி கட்டி போராட்டம்


தூத்துக்குடியில் வீடு-கடைகளில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2019 10:00 PM GMT (Updated: 24 Jan 2019 7:31 PM GMT)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் வீடு-கடைகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றக்கோரி வீடுகளில், கருப்புக்கொடி கட்டவும், கருப்பு நிற ஆடைகள் அணிந்தும் எதிர்ப்பை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஆங்காங்கே வீடுகள், கடைகளில் கருப்புக்கொடியை கட்டி போராட்டம் நடத்தினர்.

அதேபோன்று பழைய பஸ்நிலையம், பாளையங்கோட்டை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஸ்டெர்லைட்டை தடை செய்ய வேண்டும் (பேன் ஸ்டெர்லைட்) என்ற வாசகம் அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. சிலர் கருப்பு நிற உடை அணிந்து இருந்தனர்.

இந்த போராட்டத்தையொட்டி தூத்துக்குடியில் முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருந்தனர். ஏற்கனவே, போராட்டம் நடந்த கிராமங்கள் மற்றும் மீனவ கிராமங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story