மாநில செய்திகள்

சசிகலா மீது 4 வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு + "||" + 4 charges filed against Sasikala

சசிகலா மீது 4 வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு

சசிகலா மீது 4 வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மீதான அந்நியச்செலாவணி மோசடி வழக்கில் காணொலிக்காட்சி மூலம் எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
சென்னை,

ஜெஜெ டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து மின்னணுக்கருவிகள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அந்நியச்செலாவணி மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, அந்நியச்செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக காணொலிக்காட்சி மூலம் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மலர்மதி முன்பு ஆஜரானார். இந்த வழக்கில் சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

சசிகலா மீது  4 வழக்குகளில்  குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோடநாடு எஸ்டேட் வாங்கியதில் முறைகேடு என்று அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சசிகலா வாக்குமூலம் அளித்து உள்ளார்.

சசிகலாவிடம் பிப்ரவரி 12-ம் தேதி அமலாக்கத்துறை குறுக்கு விசாரணை செய்யும். சசிகலா மீதான 4 வழக்குகளை 4 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சிறையில் சசிகலா சிறப்பு சலுகை பெற்றது உண்மைதான்: விசாரணைக்குழு அறிக்கையில் தகவல்
சிறையில் சசிகலா சிறப்பு சலுகை பெற்றது உண்மைதான் என்று விசாரணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: டிடிவி தினகரன்
அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, துரோகிகளுடன் நாங்கள் இணைய மாட்டோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
3. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்திப்பு
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர்.