‘பிளஸ்–2 செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்’ அரசு தேர்வுத்துறை இயக்குனர் தகவல்


‘பிளஸ்–2 செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்’ அரசு தேர்வுத்துறை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 28 Jan 2019 6:50 PM GMT (Updated: 28 Jan 2019 6:50 PM GMT)

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, 

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக அரசு தேர்வுத்துறை பணியாளர்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர். இந்த நிலையில் வருகிற 1–ந் தேதி முதல் பிளஸ்–2 செய்முறை தேர்வு நடைபெற இருக்கிறது.

ஆசிரியர்கள், தேர்வுத்துறை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தால் செய்முறை தேர்வில் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டபோது, ‘பிளஸ்–2 செய்முறை தேர்வு ஏற்கனவே அறிவித்த நாட்களில் திட்டமிட்டபடி நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை’ என்றார்.

அதேபோல், செய்முறை தேர்வு வினா வடிவமைப்பு தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘செய்முறை தேர்வு வினா வடிவமைப்பு விவரத்தை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Story