பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் ஐகோர்ட்டில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு திட்டவட்டம்


பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் ஐகோர்ட்டில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு  திட்டவட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2019 12:05 PM GMT (Updated: 29 Jan 2019 12:05 PM GMT)

பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என உயர்நீதிமன்றத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

சென்னை

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த முறை நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து அவர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஜாக்டோ-ஜியோ அமைப்பு எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சரமாரியாக நீதிபதி பல்வேறு கேள்வி எழுப்பினார்.

தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் போராட்டத்தை இந்த கல்வியாண்டு முடியும் வரை தள்ளி வைக்க முடியுமா? என்று இன்று  பிற்பகலுக்குள் தெரிவிக்க வேண்டும்’ என்று நீதிபதி கூறினார்.

அதன்படி இன்று பிற்பகல் இந்த விசாரணை நடைபெற்றது விசாரணையின் போது இரண்டு முறை நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று போராட்டதை தள்ளி வைத்தோம். கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு அளித்த உத்திரவாதத்தை செயல்படுத்த தவறியதால் தான் மீண்டும் போராட்டம். 

பேச்சுவார்த்தை நடத்த முதல்வரை அறிவுறுத்தவும். பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும்- ஜாக்டோ-ஜியோ அமைப்பு உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறியது.

ஆண்டுக்கணக்கில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் கோரிக்கைகளுக்காகவே போராட்டம். வேறு எந்த உள்நோக்கமும் ஆசிரியர்கள் சங்கங்களுக்கு இல்லை.  விரும்பிய இடத்தில் பணியிடமாறுதல் என்ற சலுகை வழங்கி போராட்டத்தில் நீர்த்து போக செய்ய அரசு முயற்சி என ஆசிரியர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. 

90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓரிரு நாளில் இயல்பு நிலை முழுமையாக திரும்பி விடும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது

உயர்நீதிமன்றம் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியது மகிழ்ச்சி என நீதிபதி தெரிவித்தார்.

Next Story