தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வரும் மார்ச் 10ஆம் தேதி வழங்கப்படும் - விஜயபாஸ்கர்


தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வரும் மார்ச் 10ஆம் தேதி வழங்கப்படும் - விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 1 Feb 2019 5:19 PM IST (Updated: 1 Feb 2019 5:19 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வரும் மார்ச் 10ஆம் தேதி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பயிலரங்கிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,

கடந்த 14 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.  இந்த ஆண்டு ஒரே தவணையாக வரும் மார்ச் 10ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். உலக வங்கி மூலம் தமிழக சுகாதாரத்துறைக்கு 2 ஆயிரத்து 645 கோடி ரூபாய் கிடைக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story