மத்திய பட்ஜெட்டில் தமிழக ரெயில் திட்டங்களுக்கு குறைவான நிதி; ராமதாஸ் கண்டனம்


மத்திய பட்ஜெட்டில் தமிழக ரெயில் திட்டங்களுக்கு குறைவான நிதி; ராமதாஸ் கண்டனம்
x
தினத்தந்தி 2 Feb 2019 5:35 PM IST (Updated: 2 Feb 2019 5:35 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பட்ஜெட்டில் தமிழக ரெயில் திட்டங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

ரெயில்வே துறைக்கென தனி பட்ஜெட் போடுகிற வழக்கத்தை மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. கடைசியாக 2016-17 நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை அப்போதைய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, 2016-ம் ஆண்டு பிப்ரவரி 25-ந் தேதி தாக்கல் செய்தார்.

2017, 2018 ஆண்டுகளில் பொது பட்ஜெட்டுடன் ரெயில் பட்ஜெட் இணைத்தே தாக்கலானது.  இந்த ஆண்டும் அந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. இந்த முறை ரெயில்வே துறைக்கும், நிதித்துறைக்கும் ஒரே மந்திரி பியூஸ் கோயல் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த மத்திய பட்ஜெட்டில் ரெயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. எந்த வகுப்பு கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை. இதன்மூலம் ரெயில் பயணிகள் அனைவரும் தப்பித்தனர்.

அதே போன்று சரக்கு கட்டணமும் அதிகரிக்கவில்லை. இது அனைத்து தரப்பினரின் வரவேற்புக்கு உரியதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறும்பொழுது, மத்திய பட்ஜெட்டில் தமிழக ரெயில் திட்டங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.  தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்ட ரெயில் திட்டங்களை இலக்கு நிர்ணயித்து நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

Next Story