மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் மதுரை, விருதுநகரில் நாளை நடக்கிறது


மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் மதுரை, விருதுநகரில் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 3 Feb 2019 2:15 AM IST (Updated: 3 Feb 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் உள்ள தணக்கன்குளம் கிராமத்தில் ஊராட்சி சபை கூட்டம் நடக்கிறது.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கிராமங்கள் தோறும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை(திங்கட்கிழமை) காலை 8.30 மணிக்கு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் உள்ள தணக்கன்குளம் கிராமத்தில் ஊராட்சி சபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின் நடத்துகிறார்.

அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெறுகிறது. பின்னர் மாலை 3.30 மணிக்கு விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டியில் ஊராட்சி சபை கூட்டமும், மாலை 4.30 மணிக்கு சாத்தூரில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டமும் நடைபெறுகிறது.

இதேபோன்று, நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஊராட்சி சபை கூட்டமும், காலை 10 மணிக்கு மானாமதுரையில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டமும் நடைபெறுகிறது. பின்னர், மாலை 3.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் வேந்தோணியில் ஊராட்சி சபை கூட்டமும், மாலை 4.30 மணிக்கு பரமக்குடியில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டமும் நடைபெறுகிறது.

Next Story