மெரினாவில் ராட்சத அலையில் சிக்கி மாயமான 3 மாணவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின


மெரினாவில் ராட்சத அலையில் சிக்கி மாயமான 3 மாணவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின
x
தினத்தந்தி 3 Feb 2019 3:00 AM IST (Updated: 3 Feb 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மெரினாவில் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி மாயமான பள்ளி மாணவர்கள் 3 பேரின் உடல்கள் கரை ஒதுங்கின.

அடையாறு,

சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் 10 மாணவர்கள் நேற்று முன்தினம் மதியம் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து சுற்றிப்பார்த்தனர். பின்னர் அனைவரும் கடலில் இறங்கி குளித்தனர்.

அப்போது சேலையூரை சேர்ந்த செந்தில்குமார்(வயது 14), சதீஷ்(14) மற்றும் கிண்டியை சேர்ந்த வினோத்குமார்(14) ஆகிய 3 மாணவர்களும் ராட்சத அலையில் சிக்கி மாயமானார்கள். இதுபற்றி தகவல் அறிந்த மெரினா போலீசார், மாயமான 3 மாணவர்களையும் தேடி வந்தனர்.

உடல்கள் கரை ஒதுங்கின

இந்தநிலையில் நேற்று மதியம் மாணவர் செந்தில்குமாரின் உடல் பட்டினப்பாக்கம் கடற்கரையிலும், சதீசின் உடல் திருவான்மியூர் கடற்கரையிலும், வினோத்குமாரின் உடல் நீலாங்கரையிலும் கரை ஒதுங்கின. பலியான 3 பேரின் உடல்களையும் மெரினா போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story