பெருநகரங்களில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும்; அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்


பெருநகரங்களில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும்; அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 3 Feb 2019 7:11 AM GMT (Updated: 2019-02-03T13:25:52+05:30)

பெருநகரங்களில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் கிரிக்கெட் மற்றும் கபடி போட்டிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, ஜெர்மன் நிறுவனத்துடன் மிகக்குறைந்த வட்டியில் 12 ஆயிரம் புதிய மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

இதேபோன்று சென்னை, மதுரை, கோவை  உள்ளிட்ட பெருநகரங்களில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார்.

Next Story