நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? ஜி.கே.வாசன் பதில்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும்போது மக்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு, தொண்டர்களின் கருத்தை கேட்டு கூட்டணி அமைக்கப்படும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
திருவொற்றியூர்,
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி ராஜகோபுர ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பால் பணிவிடை உகப்படிப்பும், மதியம் பணிவிடை உச்சிப்படிப்பும் நடைபெற்றது.
இதையொட்டி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் பெண்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார்.
அதைதொடர்ந்து நிருபர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:-
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் என்பது விவசாய பெருங்குடி மக்களுக்கு முறையாக, முழுமையாக கொடுக்கவேண்டிய நிவாரணத்தை கொடுக்கவில்லை. விவசாயிகள் வறட்சியில் வாடி கொண்டிருக்கிற நிலையில் அவர்களின் வங்கிக்கடனை ரத்து செய்து இருக்கக்கூடிய நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கவேண்டும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஒரு தொகையை ஒதுக்கி நிவாரணம் வழங்கி இருக்கவேண்டும். மத்திய அரசு பட்ஜெட்டில் அதை செய்யவில்லை. இது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம். உடனடியாக அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பாலான கட்சிகள் கூட்டணி அமைத்து செயல்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எந்த கட்சியும் அதிகாரப்பூர்வமாக தங்களது கூட்டணியை அறிவிக்கவில்லை.
த.மா.கா.வும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே தேர்தல் நெருங்கும்போது மக்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு, தொண்டர்களின் கருத்தை கேட்டு கூட்டணி அமைக்கப்படும். அதற்குரிய நாட்களில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நிச்சயமாக வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், அருண்குமார், பிஜூசாக்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story