தமிழக பட்ஜெட்; கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடு கட்டித்தர ரூ.1,700 கோடி ஒதுக்கீடு


தமிழக பட்ஜெட்; கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடு கட்டித்தர ரூ.1,700 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 8 Feb 2019 6:26 AM GMT (Updated: 8 Feb 2019 6:26 AM GMT)

தமிழக பட்ஜெட்டில் மத்திய , மாநில அரசு பங்களிப்புடன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடு கட்டித்தரப்படும். இதற்கு ரூ.1,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். #TNBudget

சென்னை

2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- 

* ஏழை, நடுத்தர மக்கள் வீட்டு வசதியை பெற புதிய கொள்கை உருவாக்கி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

* சென்னை தவிர்த்த பிற நகரங்களில் 5000 கோடி மதிப்பீட்டில் வீட்டு வசதி திட்டம்.

*  தமிழ்நாடு உறைவிட நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது நகர்ப்புற வறுமை ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது .

* தீனதயாள் உபாத்யாயா, திட்டத்தின்கீழும், தமிழக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்திற்கு நிதி ஒதுக்கீடு

* 2011-12 ஆம் ஆண்டில் 63,178 ஆக இருந்த பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை, 2018-19 ஆம் ஆண்டில் 33,519 ஆக குறைந்துள்ளது. 

* மத்திய அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தின் பயனை அமைப்பு சாரா தொழிலாளர்களும் பெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

* 2011-2012 ஆம் ஆண்டில் 1,03,600 ரூபாயாக இருந்த தனிநபர் வருமானம் 2017-2018 ஆம் ஆண்டில் 1,42,267 ரூபாயாக உயர்ந்துள்ளது.

* பெட்ரோலிய பொருட்கள் மதுபான, பொருட்கள் விற்பனையின் மீதான வரி, வணிக வரி வருவாயில் முக்கியமான வருவாயாக உள்ளது. 2018-19 இல் 84,365.91 கோடி ரூபாயாகவும், 2019-20 இல் 96,177.14 கோடி ரூபாயாகவும் இருக்கும் என கணிப்பு.

* புதிய தொழில் நிறுவனங்களுக்காக நிலத்தேவைகள் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, திருமுடிவாக்கம் மற்றும் ஆலந்தூர் தொழிற்பேட்டைகள் விரிவுபடுத்தப்படும்.   இத்தொழிற்பேட்டைகளுக்கு சீராக மின் விநியோகம் வழங்கப்படும்.

* சென்னை, கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் இடங்களை சுத்திகரிப்பு செய்து அந்த இடங்களை மீட்டெடுப்பதற்கும் கழிவில் இருந்து. மின்சாரம் தயாரிக்கும் அலகினை அமைப்பதற்குமான திட்டத்தை அரசு - தனியார் பங்களிப்பு முறையில் 5,259.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. 

* மத்திய , மாநில அரசு பங்களிப்புடன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடு கட்டித்தரப்படும்.  இதற்கு ரூ.1,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* காவிரி பாசன பகுதிகளில் பருவ நிலை மாற்ற தழுவல் திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 1560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செயல்படுத்தி வருகிறது.

Next Story