தமிழக பட்ஜெட்: நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டத்திற்காக ரூ.13,605.19 கோடி ஒதுக்கீடு


தமிழக பட்ஜெட்: நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டத்திற்காக ரூ.13,605.19 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 8 Feb 2019 6:34 AM GMT (Updated: 8 Feb 2019 7:34 AM GMT)

தமிழக பட்ஜெட்டில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டத்திற்காக ரூ.13,605.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #TNBudget

சென்னை

2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- 

* தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் 1986 கி.மீ தொலைவில் சாலைகள் மேம்படுத்தப்படும்.

* உலக வங்கி நிதி உதவியுடன் 2-வது கட்ட திட்டப் பணிகள் ரூ.1171 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது.

* தமிழக சாலை மேம்பாடு ரூ.459.74 கோடி ஒதுக்கீடு

* சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

* சென்னை சுற்றுவட்ட சாலைக்கு, கடன் உதவி பெற ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை. இந்த திட்டம் மூலம்  சென்னை சுற்றுவட்ட சாலை தரத்தை மேம்படுத்தும்.

* 2019-20ம் ஆண்டில் 206 ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* நபார்ட் வங்கி உதவியின் கீழ் ரூ.299.60 கோடி செலவில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டத்திற்காக ரூ.13,605.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Next Story