தமிழக பட்ஜெட்: மானிய விலை இருசக்கர வாகனத் திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு


தமிழக பட்ஜெட்: மானிய விலை இருசக்கர வாகனத் திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 8 Feb 2019 7:06 AM GMT (Updated: 8 Feb 2019 7:06 AM GMT)

தமிழக பட்ஜெட்டில் மானிய விலை இருசக்கர வாகனத் திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #TNBudget

சென்னை

2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- 

* 754 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* 2011 முதல் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

* கிராமப்புற கோவில்களுக்கான நிதி உதவி திட்டமும், ஒருகால பூஜை திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281.86 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* பல்வேறு திருமண நிதி உதவி திட்டங்களுக்காக ரூ.726.32 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

* பணிபுரியும் பெண்களுக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* ஒருங்கிணைந்த குழந்தைகள் பணிகள் மேம்பாடு திட்டத்தில், 24 லட்சம் குழந்தைகள் பலனடைகிறார்கள்.

* 2019-20 பட்ஜெட்டில் சமூக நலத்துறைக்கு 5305 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரிலான மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Next Story