தமிழக பட்ஜெட்: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க ரூ.148.83 கோடி ஒதுக்கீடு


தமிழக பட்ஜெட்: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க ரூ.148.83 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 8 Feb 2019 7:13 AM GMT (Updated: 8 Feb 2019 7:13 AM GMT)

தமிழக பட்ஜெட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க ரூ.148.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #TNBudget

சென்னை

2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- 

* தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு திறனுக்காக ரூ.200 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. 

* ஆண்டுதோறும் 10 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகள் உயர்நிலை சிறப்பு தகுதி தேர்வின் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

* போட்டித்  தேர்வுகளுக்கு பயிற்சி மையம், வேலை வழங்கும்  நிறுவனங்களையும், வேலை தேடுவோரையும் இணைக்கும் மாநில தொழில் மையம் உருவாக்கப்பட்டு வருகிறது.

* சுற்றுலா திட்டங்களை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரிலான மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மீனம்பாக்கம் - கிளாம்பாக்கம் (வண்டலூர்) இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் ரூ.43.39 கோடியில்  திருக்கோயில் திருப்பணிகள்.

* நெசவாளர் கூட்டுறவு சங்க மானியங்களுக்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கைத்தறி உதவி திட்டத்துக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* விலையில்லா வேட்டிகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.490 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு ரூ.1170.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க ரூ.148.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
* மத்திய அரசின் ஒய்வூதிய  திட்டமானது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

Next Story