மாநில செய்திகள்

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில்: பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை கடிதம் + "||" + Chief Minister Palanisamy's letter to Prime Minister Modi

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில்: பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை கடிதம்

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில்: பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை கடிதம்
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கும் மத்திய அரசு 50% நிதி பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை கடிதம் வழங்கினார்.
சென்னை,

திருப்பூரில் நடைபெற்ற விழாவில், சென்னை டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் முழுமை அடைந்து உள்ளது.

இந்தநிலையில், சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளுக்கும் மத்திய அரசு 50% நிதி பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும், 2-ம் கட்ட மெட்ரோ பணிகளை தொடங்க உரிய அனுமதியை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூரில் பிரதமர் மோடியிடம் நேரில் கடிதத்தினை தந்த முதல்-அமைச்சர் பழனிசாமி இதுகுறித்து வலியுறுத்தினார்.