தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை; மத்திய அரசிடம் அசைந்து கொடுத்ததில்லை-ஓ.பன்னீர் செல்வம்


தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை; மத்திய அரசிடம் அசைந்து கொடுத்ததில்லை-ஓ.பன்னீர் செல்வம்
x
தினத்தந்தி 11 Feb 2019 10:52 AM GMT (Updated: 11 Feb 2019 10:52 AM GMT)

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை, இருந்தாலும் மத்திய அரசிடம் நாங்கள் அசைந்து கொடுத்ததில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் செங்குட்டுவன், பிரதமரிடம் அதிமுக இணக்கமாக உள்ள நிலையில் மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்டுப்பெற தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். 

அப்போது குறுக்கிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை என்றாலும், மாநில அரசின் நியாயத்தை மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தும் அதேநேரத்தில் எதற்கும் நாங்கள் அசைந்து கொடுத்ததில்லை.

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் 52 சதவீதம் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என பலமுறை பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியும் எந்த பலனும் இல்லை.

இதுவரையில் தாம் தாக்கல் செய்தவற்றிலேயே தற்போது தாக்கல் செய்ததுதான் மிகச் சிறந்த பட்ஜெட் என்றும் சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Next Story