மாநில செய்திகள்

பிரதமர், முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடவேண்டிய கட்டாயம் இல்லைஐகோர்ட்டு கருத்து + "||" + Prime Minister Chief Minister will attend Government programs National anthem   Not mandatory The opinion of the Court

பிரதமர், முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடவேண்டிய கட்டாயம் இல்லைஐகோர்ட்டு கருத்து

பிரதமர், முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடவேண்டிய கட்டாயம் இல்லைஐகோர்ட்டு கருத்து
பிரதமர், முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடவேண்டிய கட்டாயம் இல்லை என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், பெண் சமூக ஆர்வலர் வேம்பு என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய, மாநில அரசு விழாக்களில் தேசிய கீதம் பாடவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 2-ந் தேதி மதுரையில் நடந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடவில்லை.

இதுகுறித்து பிரதமரோ, முதல்-அமைச்சரோ வருத்தம் தெரிவிக்கவில்லை. அதேநேரம் தேசிய கீதம் பாடாததற்காக தண்டனை வழங்கும் விதிகள் எதுவும் இல்லை.

எனவே, தண்டனை வழங்கும் விதிகளை உருவாக்க தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இதுகுறித்து நான் அனுப்பிய புகாரையும், தேசிய கீதத்தை அவமதித்ததாக தமிழக தலைமை செயலாளருக்கு எதிராக நான் அனுப்பிய புகாரையும் பரிசீலிக்கவும், மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அதற்கு நீதிபதிகள், ‘தேசிய கீத விதிகளின்படி, பிரதமர், முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடவேண்டும் என்பது கட்டாயம் இல்லை’ என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூரில் 100 படுக்கைகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
திருப்பூரில் நடந்த அரசு விழாவில், திருப்பூரில் 100 படுக்கைகளுடன் கூடிய நவீன வசதிகளை கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
2. நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி வெற்றி பெற பா.ஜ.க. முயற்சி முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி வெற்றி பெற பா.ஜ.க. முயற்சி செய்கிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
3. எத்தனை தலைவர்கள் கூட்டு சேர்ந்தாலும் பிரதமர் மோடியை வீழ்த்த முடியாது - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பேட்டி
எத்தனை தலைவர்கள் கூட்டு சேர்ந்தாலும் பிரதமர் மோடியை வீழ்த்த முடியாது என்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
4. நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, வருகிற கல்வி ஆண்டில் அமல்: பிரதமர் மோடி தகவல்
நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, வருகிற கல்வி ஆண்டிலேயே அமலுக்கு வரும் என்று பிரதமர் மோடி கூறினார்.
5. திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் ஸ்வதேசி தர்சன் திட்டத்தை தொடங்கி வைத்தார்
ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். ஸ்வதேசி தர்சன் திட்டத்தின் கீழ் கோவிலில் நிறைவேற்றப்பட்ட அடிப்படை வசதிகளை அவர் தொடங்கி வைத்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...