பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில்  எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 13 Feb 2019 1:05 AM GMT (Updated: 13 Feb 2019 1:05 AM GMT)

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.73.00 ஆகவும், டீசல்,நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.32 காசுகளாகவும் உள்ளது. 

Next Story