கட்சி அலுவலகம் முன்பிருந்த பேனர்களை போலீசார் நீக்கியதற்கு மகளிர் காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு


கட்சி அலுவலகம் முன்பிருந்த பேனர்களை போலீசார் நீக்கியதற்கு மகளிர் காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 Feb 2019 2:01 PM GMT (Updated: 13 Feb 2019 2:01 PM GMT)

சென்னையில் கட்சி அலுவலகம் முன்பிருந்த பேனர்களை போலீசார் நீக்கியதற்கு மகளிர் காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான சாலைகள், சாலையோரங்களில் இருபுறமும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு இடையூறாக பேனர்கள் வைக்க தடை விதிக்கப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைமை அலுலகத்தில் மகளிர் காங்கிரஸ் சார்பில் சொற்பொழிவாளர்கள் மற்றும் பிரசாரகர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இது தொடர்பான விளம்பர பதாகைகள் அக்கட்சி அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்களை காவல் துறையினர் திடீரென அங்கிருந்து நீக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

இதனை அறிந்த மகளிர் காங்கிரஸ் பெண் தொண்டர்கள், போலீசாரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.  பின்னர் போலீசார்  தங்கள் நடவடிக்கையில் இருந்து பின்வாங்கினர்.  இதனை தொடர்ந்து இந்த விவகாரம் சிறிது நேரம் நிலவிய பரபரப்புக்கு பின் முடிவுக்கு வந்தது.

Next Story