தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர் விவேகானந்தர் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு


தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர் விவேகானந்தர் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 13 Feb 2019 2:53 PM GMT (Updated: 13 Feb 2019 2:53 PM GMT)

தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர் விவேகானந்தர் என்று சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

சென்னை,

சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் விவேகானந்தர் சிலையை, ஆளுநர் முன்னிலையில் முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார். 

அப்போது பேசிய முதல்-அமைச்சர் பழனிசாமி,

உலகிற்கு விவேகானந்தரை அறிமுகப்படுத்தியது சிகாகோ மாநாடு தான், அதற்கு தமிழகத்தை சேர்ந்த மன்னர் பாஸ்கர சேதுபதி தான் காரணம் என்பது பெருமை.தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர் விவேகானந்தர் என்றார்.

முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், 

இந்து சமயத்தின் பெருமையை உலகறிய செய்தவர் விவேகானந்தர். விவேகானந்தருக்கு சிலை வைத்துள்ளதற்கு தமிழக ஆளுநருக்கு நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

சிலை திறப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால், சபாநாயகர் தனபால், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story