மாநில செய்திகள்

வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு + "||" + Government Jobs for one of the family members of decessed soldiers Chief Minister Palanisamy

வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.
சென்னை,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது நேற்று முன்தினம் வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

அவர்களில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி மேலதெருவைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் (வயது 30) வீர மரணம் அடைந்தார்.  இதேபோல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவசந்திரனும் வீர மரணம் அடைந்தார். அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவசந்திரன். 

வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. புல்வாமா தாக்குதலில் பலியான தமிழகத்தை சேர்ந்த 2 துணை ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு அரசு வேலை
புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான தமிழகத்தை சேர்ந்த 2 துணை ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
2. ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதல்-அமைச்சராகலாம் - முதல்-அமைச்சர் பழனிசாமி
ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
3. அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.1½ கோடி மோசடி செய்த தம்பதி - நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் மனு
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
4. முதல்வர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் - பொன்னையன்
முதல்வர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.
5. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 15 பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 15 பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.