மாநில செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார்: சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா பேட்டி + "||" + DMDK leader Vijayakanth returned from US after treatment

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார்: சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா பேட்டி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார்: சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா பேட்டி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னை,

அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சென்னை திரும்பினார்.  தேமுதிக கட்சி தலைவரும், தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றார். இந்நிலையில் விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

அதிகாலை சென்னை திரும்பினாலும், 10 மணி நேரத்திற்கு பிறகே விமான நிலையத்தை விட்டு விஜயகாந்த் வெளியே வந்தார். பேட்டரி காரில் வந்த விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.  விஜயகாந்தை வரவேற்க விமான நிலையத்தில் குவிந்து இருந்த தேமுதிக தொண்டர்களும், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா, ”அதிகாலை 3 மணிக்கு வந்தோம். பயண களைப்பால் சிறிது நேரம் விஜயகாந்த் ஓய்வு எடுத்தார். விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் விஜயகாந்த் அறிவிப்பார். கூட்டணிக்கு நாங்கள் முயற்சிக்கவில்லை. பல கட்சிகள் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கின்றன” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஈரான் அணு ஆயுதங்கள் ஏந்தியிருப்பது உலகிற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்- அமெரிக்கா
யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்து, அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியதற்கு, ஈரான் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ எச்சரித்துள்ளார்.
2. ஈரான் யுரேனிய மிரட்டல்: கவனமாக இருங்கள் -உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஈரானின் யுரேனிய மிரட்டல் குறித்து கவனமாக இருங்கள் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ அலுவலகத்துக்கு வந்த பார்சலில் ‘நச்சு’
அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ அலுவலகத்துக்கு வந்த பார்சலில் ‘நச்சு’ பொருள் இருந்துள்ளது.
4. மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
5. ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருமா? அமெரிக்கா-தலீபான்கள் சமரச பேச்சு கத்தாரில் தொடங்கியது
கத்தார் நாட்டில் அமெரிக்காவுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சமரச பேச்சு தொடங்கியது. இதில் திருப்பம் ஏற்படுமா, ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.