மாநில செய்திகள்

ரஜினியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் + "||" + Rajini's announcement is welcome ArjunSampath

ரஜினியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்

ரஜினியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்
ரஜினியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை,

வருகின்ற பாராளுமன்றத்தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. தமிழக சட்டமன்றத்தேர்தல் தான் எங்களது இலக்கு. நடைபெறவிருக்கும் 

பாராளுமன்றத்தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக்கட்சிக்கும் கிடையாது என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். இது குறித்து  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில்,

நதிநீர் இணைப்பு என்பது ரஜினிகாந்தின் கனவு. ரஜினி அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்று, 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டி என ஏற்கனவே அறிவித்துள்ளார். 

ரஜினி அறிவிப்பு வரவேற்கத்தக்கது; ரஜினி களத்தில் இறங்கினாலே வெற்றிதான். அதிமுக-பாஜக கூட்டணி சரியானது; திமுக-காங்கிரஸ் கூட்டணி குடும்ப கூட்டணி.

இவ்வாறு அவர் கூறினார்.