ரஜினி அறிக்கையால் பாஜகவிற்கு எந்தவித பாதகமும் இல்லை - தமிழிசை சௌந்தரராஜன்


ரஜினி அறிக்கையால் பாஜகவிற்கு எந்தவித பாதகமும் இல்லை - தமிழிசை சௌந்தரராஜன்
x
தினத்தந்தி 17 Feb 2019 11:54 AM GMT (Updated: 17 Feb 2019 11:54 AM GMT)

ரஜினி அறிக்கையால் பாஜகவிற்கு எந்தவித பாதகமும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

ரஜினியின் அறிக்கை தெளிவான அறிக்கை; பாஜகவுக்கு  பாஜகவிற்கு எந்தவித பாதகமும் இல்லை. எங்களை பொறுத்தவரை அறிக்கையை நேர்மையாக தான் பார்க்கிறோம். அப்போதே நதிநீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கொடுத்தவர் ரஜினிகாந்த்.

டெல்லி இல்லாமல் தமிழகம் இல்லை; தமிழகம் இல்லாமல் டெல்லி இல்லை என்ற கமல் கருத்துக்கு வரவேற்பு. சட்டையை கிழித்து வர மாட்டேன், புதிய சட்டையுடன் தான் வருவேன் என கமல் சொல்வது சரியானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story