தனியார் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் இடையேயான வருமான இடைவெளி அதிகரிக்கிறது - ஐகோர்ட் மதுரை கிளை

தனியார் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் இடையேயான வருமான இடைவெளி அதிகரிக்கிறது - ஐகோர்ட் மதுரை கிளை
x
தினத்தந்தி 18 Feb 2019 10:08 AM GMT (Updated: 18 Feb 2019 10:08 AM GMT)

ஒவ்வொரு ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் போதும் தனியார் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் இடையேயான வருமான இடைவெளி அதிகரிப்பதாக ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மதுரை ,

ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, அரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல கடமையும், பணியும் முக்கியம் என கண்டனம் தெரிவித்துள்ளது. 

மேலும், அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஒவ்வொரு ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் போதும் தனியார் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் இடையேயான வருமான இடைவெளி அதிகரிப்பதாக ஐகோர்ட்  மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

Next Story