நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. முடிவு அறிவிப்பு; துணை முதல் அமைச்சர்


நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. முடிவு அறிவிப்பு; துணை முதல் அமைச்சர்
x
தினத்தந்தி 18 Feb 2019 4:27 PM GMT (Updated: 18 Feb 2019 4:27 PM GMT)

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கூட்டணி பற்றி ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. முடிவை அறிவிக்கும் என துணை முதல் அமைச்சர் கூறியுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.  இதனை தொடர்ந்து தமிழகத்தில் பாரதீய ஜனதா கூட்டணி அமைப்பது பற்றி முடிவு செய்வதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நாளை காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள் மும்பையில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.  இதனால் இந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி நாளை இறுதி செய்யப்படும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கூட்டணி பற்றி ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. முடிவை அறிவிக்கும் என துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று கூறினார்.  அனைவரது எண்ணங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் கூட்டணி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story