தமிழக உரிமைகளை மீட்டெடுக்க 10 கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் அளித்துள்ளோம்.- டாக்டர் ராமதாஸ்


தமிழக உரிமைகளை மீட்டெடுக்க 10 கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் அளித்துள்ளோம்.- டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 19 Feb 2019 6:37 AM GMT (Updated: 19 Feb 2019 6:37 AM GMT)

தமிழக உரிமைகளை மீட்டெடுக்க 10 கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் அளித்துள்ளோம் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சென்னை

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம்பெறாது என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், திமுக, காங்கிரஸ் இடையே தொகுதிகளை இறுதி செய்வதில் முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலை நீடிக்கிறது.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு அடுத்தமாதம்  அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்டணி அமைக்க ஒவ்வொரு கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி குறித்து  இன்று  பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா முறைப்படியான கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் அவரது வருகை திடீர் என ரத்து செய்யப்பட்டது.ஆனால் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று மதியம் தமிழகம் வர உள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக  இணைந்து தேர்தலைச் சந்திக்கப்போவது உறுதியாகி இருக்கிறது.  இந்தக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறப் போகின்றன என்பது அடுத்து வரும் நாட்களில் தெரியவரும்.

பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில்  சேர்ப்பது குறித்து இன்று காலை அதிமுக தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. ஆழ்வார்பேட்டையில்   உள்ள ஒரு  ஓட்டலில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.  ஓட்டலுக்கு   டாக்டர் ராமதாஸ்,  அன்புமணி ராமதாஸ்  மற்றும் பா.ம.க நிர்வாகிகள் வருகை தந்த அவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் இரு கடசி தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.   மக்களவை தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தத்தில் இரு கட்சிகளும் கையெழுத்திட்டு உள்ளன.

பின்னர் அ.தி.மு.க - பா.ம.க தலைவர்கள் நிருபர்களை சந்தித்து  பேட்டி அளித்தனர். அ.தி.மு.க  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
 
அ.தி.மு.க கூட்டணியில்  பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7  தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு  உள்ளது.  அ.தி.மு.க கூட்டணியில் பா.மகவுக்கு  ஒரு மாநிலங்களவை தொகுதியும்  ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 21 தொகுதிகளில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ம.க அ.தி.மு.கவுக்கு  ஆதரவு அளிக்கும் என கூறினார்.

பாட்டாளி மக்கள்  கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  கூறியதாவது:-

அதிமுக - பாமக கூட்டணி மக்கள் நல கூட்டணி, மெகா கூட்டணியாக அமையும் .  எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.  தமிழக உரிமைகளை மீட்டெடுக்க 10 கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் அளித்துள்ளோம்.

ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை அளித்துள்ளோம் என கூறினார்.

Next Story