நாடாளுமன்ற தேர்தல்; அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை


நாடாளுமன்ற தேர்தல்; அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 19 Feb 2019 9:27 AM GMT (Updated: 19 Feb 2019 9:27 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.  இதனை தொடர்ந்து தமிழகத்தில் பாரதீய ஜனதா கூட்டணி அமைப்பது பற்றி முடிவு செய்ய சென்னைக்கு கடந்த 14ந்தேதி பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயல் வருகை தந்த நிலையில் அ.தி.மு.க. அமைச்சர் தங்கமணியுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையினை அடுத்து இரு கட்சிகள் இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது என தகவல் வெளியானது.

இந்த நிலையில், அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. இடையே இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதில் முடிவு எட்டப்பட்டது.

இதுபற்றி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:- அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு  உள்ளன.  அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதியும்  ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 21 தொகுதிகளில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க.வுக்கு  ஆதரவு அளிக்கும் என கூறினார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.  இதில் பியூஷ் கோயலுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுண் பிளாசா ஓட்டலுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி வருகை தந்துள்ளனர்.  அக்கட்சியின் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் கோயலுடன் ஆலோசனையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Next Story