மாநில செய்திகள்

டெல்லியில் ராகுல் காந்தியுடனான தமிழக காங்கிரசார் நடத்திய ஆலோசனை நிறைவு + "||" + The consultation conducted by the Tamil Congress with Rahul Gandhi in Delhi was completed

டெல்லியில் ராகுல் காந்தியுடனான தமிழக காங்கிரசார் நடத்திய ஆலோசனை நிறைவு

டெல்லியில் ராகுல் காந்தியுடனான தமிழக காங்கிரசார் நடத்திய ஆலோசனை நிறைவு
டெல்லியில் ராகுல் காந்தியுடனான தமிழக காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆலோசனை நிறைவடைந்தது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.  இதில் தி.மு.க.வுடன் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தியை டெல்லியில் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த சந்திப்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ப. சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனையில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வலியுறுத்த வேண்டும் என கே.எஸ். அழகிரி ராகுலிடம் கேட்டு கொண்டுள்ளார்.  இந்த ஆலோசனை நிறைவடைந்து உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.  தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி பற்றி நாளை அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல்.  அவர்களுடன் யார் சேர்ந்தாலும் அவர்களும் மூழ்குவார்கள்.  அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை. 

தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட நிறைவு பெற்றுள்ளது.  இன்றோ அல்லது நாளையோ அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராகுலின் குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டம் ஒரு பொய் -நிதின் கட்கரி
ராகுலின் குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டம் ஒரு பொய் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
2. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் -காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
மத்தியில் மோடி ஆட்சியை அகற்றிவிட்டு காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
3. காங்கிரஸ் ஆட்சியில் தான் ஊழல் நடந்தது ராகுல் காந்தி, சரத்பவார் மீது விசாரணை நடத்த வேண்டும் உத்தவ் தாக்கரே பேச்சு
காங்கிரஸ் தலைமையில் நடந்த 10 ஆண்டு ஆட்சியில் தான் ஊழல் நடந்தது. இதுகுறித்து ராகுல் காந்தி மற்றும் சரத்பவார் மீது விசாரணை நடத்த வேண்டும் என உத்தவ் தாக்கரே பேசினார்.
4. ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் -தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கோரிக்கை
ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
5. "என்னை உங்களுடைய பிள்ளையாக பாருங்கள்" வயநாட்டில் ராகுல் காந்தி பிரசாரம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.