எண்ணிக்கையை மட்டும் வைத்து வலுவான கூட்டணி அமையாது - கனிமொழி கருத்து


எண்ணிக்கையை மட்டும் வைத்து வலுவான கூட்டணி அமையாது - கனிமொழி கருத்து
x
தினத்தந்தி 20 Feb 2019 7:52 AM GMT (Updated: 20 Feb 2019 7:52 AM GMT)

எண்ணிக்கையை மட்டும் வைத்து வலுவான கூட்டணி அமையாது, அதிமுக கூட்டணி குறித்து கனிமொழி கருத்து தெரிவித்து உள்ளார்.

சென்னை

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய திமுக எம்பி கனிமொழி  விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது  அவர் கூறியதாவது:-

எண்ணிக்கையில் மட்டுமே வலுவாக கூட்டணி அமைந்துவிடாது. காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கின்றனர். தோழமை கட்சிகளுடனான கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். கீழ்த்தரமாக விமர்சித்த பாமகவுடன் கூட்டணி அமைத்துள்ளது அதிமுக. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story