மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் + "||" + New project works The first-ever Minister Edappadi Palanisamy started

தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
தமிழகம் முழுவதும் ரூ.533 கோடி செலவிலான நீர்வள ஆதாரத் துறையின் புதிய திட்டப் பணிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை, 

தமிழகம் முழுவதும் ரூ.533 கோடி செலவிலான நீர்வள ஆதாரத் துறையின் புதிய திட்டப் பணிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள், 4 துறை தலைவர் அலுவலக அறை, முதல்வர் அறை மற்றும் 6 கழிவறை கட்டிடங்கள்;

காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் உள்ள ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டிடம்; தர்மபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் அலுவலகக் கட்டிடம்;

சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடம்;

சென்னை - அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டிடம், என மொத்தம் 77 கோடியே 94 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டிடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 10 மீனவ குழுக்களுக்கு செயற்கைகோள் தொலைபேசிகள் மற்றும் நேவ்டெக்ஸ் கருவிகளை, பயனாளிகளுக்கு வழங்கி திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ஆழ்கடல் மீன்பிடிப்பின்போது தகவல் தொடர்புக்காக இவை பயன்படும்.

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் மென்திறன் மேம்பாடு, ஆங்கில மொழி பேச்சுத்திறன் வளர்த்தல், வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தல், நூலகத்தின் பயன்பாட்டை அதிகரித்தல், கலை மற்றும் பண்பாட்டு திறன் பகிர்வு மற்றும் திறன் வளர்த்தல் போன்றவை தொடர்பாக தமிழ்நாடு அரசிற்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 387 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை அமைக்கும் பணி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முக்கொம்பு மேலணையின் கொள்ளிடம் கதவணை மேலும் பாதிக்கப்படா வண்ணம் பாதுகாக்கும் பொருட்டு பலப்படுத்துதல், ஆகிய பணிகளுக்கு காணொலிக் காட்சி மூலமாக தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னை - தரமணியில் பொதுப்பணித்துறை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தரைகீழ் நீர்த்தேக்கத் தொட்டி; டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் அருகில் நேரு நகர் மற்றும் எழில் நகர் பகுதிகளை இணைக்க வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இருவழிப் பாலம்;

காஞ்சீபுரம் மாவட்டம் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மறுகட்டுமானம் செய்யப்பட்ட ஒருவழிப் பாலம்;

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் முதல் எர்ணாவூர் குப்பம் வரை கடலரிப்பை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தொடர் தூண்டில் வளைவுகள்; திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் இருந்து பச்சையாறு வழிந்தோடிக்கு கீழ்புறம் சாலை வலதுபுறத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்கால், என மொத்தம் 240 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதாரத் துறையின் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் அடையாறு ஆறு மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி, தேனி மாவட்டம் மீறுசமுத்திரம் கண்மாய், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் ஏரி, பூண்டி ஏரி ஆகிய ஏரிகளில் தூர் வாரும் பணிகள்; என மொத்தம் 532 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதாரத் துறையின் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.