மாநில செய்திகள்

முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் + "||" + At first I stood alone, and now the crowd is gathered: Kamal Hassan

முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன், கட்சியை கொடியை ஏற்றினார். பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், “ முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது.  தமிழகமெங்கும் மக்கள் நீதி மய்யம் எனும் குடும்பம் பரவியுள்ளது.  

மக்கள் பலம் இருப்பதால் தேர்தலில் நாம் தனியே நிற்போம் என அறிவித்தேன். நாம் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன, குறுகிய நாட்களே உள்ளன” என்றார். 

கட்சியின் முதலாமாண்டு நிறைவையொட்டி இன்று பிற்பகல் நாகை மாவட்டம் செல்லும் கமல்ஹாசன், வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்குகிறார். அதன்பின்னர் இன்று மாலை திருவாரூரில் நடைபெற உள்ள கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியா? கமல்ஹாசன் பதில்
நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியா? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
2. 4 வயதில் நெதர்லாந்து குடும்பத்தால் தத்தெடுப்பு: சென்னையில், பெற்றோரை தேடி அலையும் வாலிபர் வளர்ப்பு தாயும், சகோதரரும் உதவுகிறார்கள்
4 வயதில் நெதர்லாந்து குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்ட வாலிபர், தற்போது தனது பெற்றோரை தேடி சென்னையில் அலைகிறார். அவருக்கு உதவியாக அவரது வளர்ப்பு தாயும், சகோதரரும் உதவியாக இருக்கிறார்கள்.
3. மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஸ்ரீபிரியா தலைமையில் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஸ்ரீபிரியா தலைமையில் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.
4. பெட்ரோல் விலை 16 காசுகள் உயர்வு, டீசல் விலை குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.75.25 ஆக விற்பனையாகிறது.
5. ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது : கமல்ஹாசன்
ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.