இயற்கையாக அமைந்த கூட்டணி அதிமுக கூட்டணி - அமைச்சர் ஜெயக்குமார்


இயற்கையாக அமைந்த கூட்டணி அதிமுக கூட்டணி - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 21 Feb 2019 11:18 AM GMT (Updated: 21 Feb 2019 11:18 AM GMT)

அதிமுக கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி என்றும், திமுக கூட்டணியை கலவரக் கூட்டணி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,

அதிமுக கூட்டணி  இலை, பழம், மலர், மத்தளம் என இயற்கையாக அமைந்த கூட்டணி என்றும், ஆனால் திமுக கூட்டணி கொதிப்பான சூரியன், வெட்டப்பட்ட கை, அரிவாள்சுத்தி என அமைந்த கலவரக் கூட்டணி.

மேலும் இயற்கையாக அமைந்த இந்த மெகா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அதுமட்டுமின்றி திமுகவை காட்டிலும் கூட்டணி மற்றும் தேர்தல் பணியில் விவகாரத்தில் அதிமுக ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதி ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு, திமுக வலு இழந்து இருப்பதால் தான் காங் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தார்.




Next Story