அரசியல் பேச வரவில்லை: விஜயகாந்தை சந்தித்த பின் மு.க ஸ்டாலின் பேட்டி


அரசியல் பேச வரவில்லை: விஜயகாந்தை சந்தித்த பின் மு.க ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 22 Feb 2019 8:39 AM GMT (Updated: 22 Feb 2019 8:39 AM GMT)

அரசியல் பேசுவதற்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

பரபரப்பான அரசியல் சூழலில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள  விஜயகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. விஜயகாந்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:- 

தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் அரசியல் பேச வரவில்லை 
 உடல் நலம் பற்றி மட்டுமே விஜயகாந்திடம் விசாரித்தேன். விஜயகாந்த்  நல்ல ஆரோக்கியத்துடன் நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும். கருணாநிதி மீது அளவு கடந்த பாசம் கொண்டவர் விஜயகாந்த்.   எப்போதும் என்னை அண்ணன், அண்ணன் என்றே விஜயகாந்த் அழைப்பார்” என்றார். 

திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் வரவேற்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, உங்களின் நல்ல என்ணத்திற்கு பாராட்டுக்கள் என பதிலளித்தார். 

Next Story