சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்


சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 22 Feb 2019 10:00 PM GMT (Updated: 22 Feb 2019 7:56 PM GMT)

சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை, 

சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்கள், சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(வ.எண்: 06003), எழும்பூரில் இருந்து ஏப்ரல் மாதம் 3, 10, 19, 24 மற்றும் மே மாதம் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06004), நெல்லையில் இருந்து ஏப்ரல் மாதம் 4, 11, 18, 25 மற்றும் மே மாதம் 2, 9, 23, 30 ஆகிய தேதிகளில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு வந்து சேரும்.

நாகர்கோவில்-தாம்பரம் சுவிதா சிறப்பு ரெயில்(82646), நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் மாதம் 7, 14, 21, 28 மற்றும் மே மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 5.05 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

சென்னை சென்டிரல்- திருவனந்தபுரம்

எர்ணாகுளம்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06038), எர்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் மாதம் 4, 11, 18, 25 மற்றும் மே மாதம் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்டிரலுக்கு மறுநாள் காலை 9.35 மணிக்கு வந்தடையும்.

சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06059), சென்னை சென்டிரலில் இருந்து ஏப்ரல் மாதம் 4, 11, 25 மற்றும் மே மாதம் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் திருவனந்தபுரத்துக்கு காலை 11.45 மணிக்கு செல்லும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06060), திருவனந்தபுரத்தில் இருந்து ஏப்ரல் மாதம் 3, 10, 17, 24 மற்றும் மே மாதம் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

சென்னை எழும்பூர்-தூத்துக்குடி

சென்னை எழும்பூர்-தூத்துக்குடி சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06053), சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் மாதம் 1, 8, 15, 22, 29 மற்றும் மே மாதம் 13, 20, 27 ஆகிய தேதிகளில் மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் தூத்துக்குடிக்கு காலை 7.10 மணிக்கு செல்லும். மறுமார்க்கமாக, தூத்துக்குடி- சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06054), தூத்துக்குடியில் இருந்து ஏப்ரல் மாதம் 2, 9, 16, 23, 30 மற்றும் மே மாதம் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

திருச்சி-எர்ணாகுளம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06026), திருச்சியில் இருந்து ஏப்ரல் மாதம் 6, 20, 27 மற்றும் மே மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

சென்னை சென்டிரல்- கோவை சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06033), கோவையில் இருந்து ஏப்ரல் மாதம் 8, 15, 22, 29 மற்றும் மே மாதம் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு கோவை செல்லும்.

கோவை-திருச்சி சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06025), கோவையில் இருந்து ஏப்ரல் மாதம் 9, 16, 23, 30 மற்றும் மே மாதம் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் திருச்சிக்கு காலை 11.15 மணிக்கு சென்றடையும்.

இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story