மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பம்: 25ம் தேதி முதல் விநியோகம் என அறிவிப்பு


மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பம்: 25ம் தேதி முதல் விநியோகம் என அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2019 10:37 AM GMT (Updated: 23 Feb 2019 10:37 AM GMT)

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு வரும் 25ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகிறது. பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துள்ள அ.தி.மு.க. அடுத்ததாக, தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

தி.மு.க.வும் முதல்கட்டமாக காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்தநிலையில், மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பம் - வரும் 25ம் தேதி முதல் அண்ணா 
அறிவாலயத்தில் விநியோகம் செய்யப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மார்ச் 7 ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயக்கப்பட்டுள்ளது. 

21 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 1 முதல் 7 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

Next Story