அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகள் முடிவாகிவிட்டன ஒரு தொகுதி ஓரிருநாளில் இறுதியாகிறது


அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகள் முடிவாகிவிட்டன ஒரு தொகுதி ஓரிருநாளில் இறுதியாகிறது
x
தினத்தந்தி 23 Feb 2019 9:51 PM GMT (Updated: 23 Feb 2019 9:51 PM GMT)

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகள் முடிவாகிவிட்டன. மீதமுள்ள ஒரு தொகுதியும் ஓரிரு நாளில் இறுதியாகிறது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் களம் அனல் பறக்கிறது. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என அரசியல் கட்சிகள் களத்தில் வேகமாக காய் நகர்த்தி வருகின்றனர். தற்போது வரை அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் மற்றும் டெல்லி மேல் சபையில் ஒரு இடமும் வழங்கப்பட இருக்கிறது. மேலும், புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து இருக்கிறது. இந்த 2 பிரதான கட்சிகளும் தங்களுடைய கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தே.மு.தி.க.வின் நிலைப்பாடு

இந்தநிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை இழுப்பதற்கு பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேற்று முன்தினம் அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு தே.மு.தி.க.வின் நாடாளுமன்ற தேர்தல் பயணம், தி.மு.க. கூட்டணியுடன் சேருமா? என்ற பேச்சும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, கூட்டணி நிலைப்பாடு குறித்து ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.

6 தொகுதிகள் முடிவாகிவிட்டன

இந்த பரபரப்பான சூழ் நிலையில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 7 இடங்களில், எந்தெந்த தொகுதிகள் முடிவாகி இருக்கின்றன? என்பது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்ட போது கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 6 தொகுதிகள் எவை? எவை? என்பது முடிவாகிவிட்டன. மீதமுள்ள ஒரு தொகுதியும் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவாகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story