மாநில செய்திகள்

ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர், துணை முதல்வர் மரியாதை + "||" + Aiadmk members remembers jeyalalitha on his 71st Birthday

ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர், துணை முதல்வர் மரியாதை

ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர், துணை முதல்வர் மரியாதை
ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினமான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்.
சென்னை, 

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினம் இன்று அதிமுக தொண்டர்களால் தமிழகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதாவின் சிலைக்கு முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்தினர். ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம், மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்வுகளும் கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளன.