மாநில செய்திகள்

மக்களவைத் தேர்தலில் போட்டி: கமல்ஹாசனுக்கு, ரஜினிகாந்த் வாழ்த்து + "||" + Contest in Lok Sabha election: Kamal Haasan congratulates Rajinikanth

மக்களவைத் தேர்தலில் போட்டி: கமல்ஹாசனுக்கு, ரஜினிகாந்த் வாழ்த்து

மக்களவைத் தேர்தலில் போட்டி: கமல்ஹாசனுக்கு, ரஜினிகாந்த் வாழ்த்து
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை,

மக்களவைத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. மேலும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடலாம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், “ கட்சி ஆரம்பித்து 2-ம் ஆண்டில், தேர்தலில் முதல் முறையாக போட்டியிட போகும் மக்கள் நீதி மய்ய தலைவர், என் நண்பர் கமல்ஹாசன் பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்” என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து நன்றி தெரிவித்த கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில், “நன்றி ரஜினிகாந்த், என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே. நாளை நமதே” என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க.வின் மூன்றாவது இலை‘பரிசு பெட்டியை கொடுத்துவிட்டு அரசின் கஜானாவை காலி செய்து விடுவார்’ டி.டி.வி.தினகரன் மீது கமல்ஹாசன் தாக்கு
அ.தி.மு.க.வின் மூன்றாவது இலை. சின்ன பரிசு பெட்டியை கொடுத்து விட்டு அரசின் கஜானாவை காலி செய்து விடுவார் என டி.டி.வி.தினகரனை கமல்ஹாசன் தாக்கி பேசினார்.
2. ‘மோடி அரசை அகற்றுங்கள்’ செஞ்சி பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு
‘மோடி அரசை அகற்றுங்கள்’ என்று செஞ்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் கூறினார்.
3. மேற்கு வங்காளத்தில் இருந்து போட்டியிட எஸ்.எஸ்.அலுவாலியாவுக்கு மீண்டும் வாய்ப்பு
மேற்கு வங்காளத்தில் இருந்து போட்டியிட எஸ்.எஸ்.அலுவாலியாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
4. தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம்: கமல்ஹாசன்
ரஜினியிடம் பேசும்போது ஆதரவு தருவதாக சொன்னார், ஆதரவு தரக் கோரி மீண்டும் மீண்டும் வலியுறுத்த முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
5. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தஞ்சையில் மாரத்தான் போட்டி
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தஞ்சையில் மாரத்தான் போட்டி நடந்தது.