தே.மு.தி.க. வராமல் போனால் கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க ஸ்டாலின் ஆலோசனை


தே.மு.தி.க. வராமல் போனால் கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க ஸ்டாலின் ஆலோசனை
x
தினத்தந்தி 27 Feb 2019 7:40 AM GMT (Updated: 27 Feb 2019 7:40 AM GMT)

தே.மு.தி.க. வராமல் போனால் கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்குவது பற்றி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்று உள்ளன.

சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.  இதுவரை நடத்தப்பட்ட கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி கேட்டறிந்து உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தொகுதி பங்கீட்டு குழு தலைவர் துரைமுருகன் மற்றும் உறுப்பினர்கள் ஆர்.எஸ். பாரதி, ஐ. பெரியசாமி, ஆ. ராசா உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

தி.மு.க. கூட்டணிக்குள் தே.மு.தி.க.வை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.  தே.மு.தி.க. வராமல் போனால் கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Next Story